செய்திகள்

86 இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனர்கள் 86 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவுக்கமைவே இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த மாதம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 43 பேரும், திருமைலைக் கடற்பரப்பில் வைத்து 43 பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களை யாழில் உள்ள இந்தியத் துணைத்தூரக அதிகாரிகள் பொறுப்பேற்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்னளர். –