செய்திகள்

9ம் திகதி அனுராதபுரத்தில் மஹிந்தவும் மைத்திரியும் ஒன்றாக மேடையில் ஏறுவர் : மஹிந்த அணி நம்பிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாகவும் அதில் யாரும் எதிர்பாராத நிகழ்வொன்று நடைபெறவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று மாலை நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் மஹிந்த அணியினரால் நடத்தப்பட்ட  செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. அந்த மேடையில் மஹிந்த ஏறுவார் இதேவேளை அங்கு யாரும் எதிர்பாரத விடயமொன்று நடைபெறவுள்ளது. என்றார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய டலஸ் அழகப்பெரும தெரிவிக்கையில் 9ம் திகதி கூட்டத்தில் மஹிந்தவுடன் மைத்திரியும் மேடையேறுவர் என எதிர்பார்க்கின்றோம்.  என தெரிவித்தார்.