செய்திகள்

9 ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்றுக்காலை 9.30க்கு சபை கூடியது. விசேட அமர்வை நடத்துவதற்கு நாடாளுமன்றம் கூடப்பட்டபோதும் அவையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அவையமர்வை 5 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே அவை நடவடிக்கை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் தீர்மானம் எதுவும் எட்டப்படாததையடுத்தே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.