செய்திகள்

9 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முதலாம் வாசிப்பிற்காக புதிய அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதி பிரதம கொறடா அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மக்கள் இன்று முதல் நீதிமன்றங்களில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன் சட்டமூலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்பு இடம்பெறவுள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதி பிரதம கொறடா தெரிவித்துள்ளார்.