செய்திகள்

9 கோடிக்கும் அதிக பெறுமதியான உள்ளாடைகளை திருடியவர் கைது

9 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பெண்களின் உள்ளாடைகளை திருடிய ஒருவர் அனுராதபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றிலிருந்து ஐரோப்பிய நாடொன்றுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர்  அவற்றை திருடி சீதுவ பகுதியில் மறைத்து வைத்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சிறிய ஆடைத்தொழிற்சாலையொன்றின் உரிமையாளர் என்பது தெரிய வந்துள்ளது.
n10