செய்திகள்

9-வது ஐ.பி.எல் தொடர்: யார் வசம் செல்லும் ஆரஞ்ச் தொப்பி?

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்ற பல்வேறு வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்ற பல்வேறு வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் குவிப்பவர் ஆரஞ்சு நிற தொப்பியுடன் விளையாடுவார். ஒவ்வொரு போட்டி நடைபெறும் போதும் அதுவரை யார் அதிக ரன்கள் குவித்துள்ளார்களோ அவர்கள் ஆரஞ்சு தொப்பியுடன் களமிறங்குவர். அதேபோல் பந்துவீச்சில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்துபர்கள் வைலட் தொப்பியுடன் களமிறங்குவர்.
இந்நிலையில், 9-வது ஐ.பி.எல் தொடர் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

gautam-gambhir-64-runs-off-52-balls-innings-video-highlights-vs-mi-ipl-2016
தற்போதையை நிலவரப்படி அதிக ரன்கள் குவித்த டேவிட் வார்னரிடம் ஆரஞ்சு தொப்பி உள்ளது. ஐதராபாத் அணிக்காக விளையாடும் வார்னர் இதுவரை 4 போட்டிகளில் 235 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்த படியாக கொல்கத்தா அணியின் காம்பீர் 226 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ஆரோன் பின்ச் 3 போட்டிகளில் 191 ரன்கள் எடுத்து 3-வது இடத்திலும் உள்ளனர்.
பேட்டிங்கை பொறுத்தவரை டெல்லி அணியின் டி-காக், பெங்களூர் அணியின் விராட் கோலி உள்ளிட்டோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பந்துவீச்சை பொறுத்த வரை ஐதராபாத் அணியில் விளையாடும் புவனேஸ்வர்குமார் 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல், மும்பை அணியின் மிட்செல் மெக்ளனகன் 7 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். புனே அணியில் விளையாடும் முருகன் அஸ்வின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இன்னும் அநேக போட்டிகள் உள்ள நிலையில் இதில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். யார் யார் வெற்றி நாயகர்களாக வலம் வருவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.