செய்திகள்

9 ஆவது தேசிய சாரணர் ஒன்றுகூடல் யாழில் ஆரம்பம்: நாடு முழுவதிலும் இருந்து 8000 சாரணர்கள் பங்கேற்பு

இலங்கையின் சகல மாவட்ட சாரணர்களும் பங்கேற்கும் 9 ஆவது தேசிய சாரணர் ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்தில் மத்திய கல்லூரி பகுதியில் நேற்று சனிக்கிழமைஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவிருக்கிறார். வட மாகாணத்தில் இத்தகைய தேசிய சாரணர் ஒன்று கூடல் நடைபெறுவது இதுவே முதல் தடவை.

“நட்புறவு மற்றும் புரிந்துணர்வு” என்ற மகுடத்தின் கீழ் நடைபெறும் இந்த ஒன்றுகூடல் 6 நாட்கள் நடைபெறவிருப்பதுடன் சுமார் 8000 வரையிலான சாரணர்களும் சாரண ஆசிரியர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். அத்துடன் நேபாளம், இந்தியா, மலேசியா, பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் இருந்து 200 வெளிநாட்டு சாரணர்கள் மற்றும் சாரணர் தலைவர்களும் இந்த ஒன்று கூடலில் கலந்துகொண்டுள்ளனர்.

a b c d e f

1 2 3 5 8 10