9 வருடத்துக்கு முன்பே ஷங்கர் செய்து காட்டிய 500, 1000 ரூபாய் விஷயம்
இந்தியா பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.
இதனையடுத்து மக்கள் ஏ.டி.எம் சென்டர் தேடி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இந்த அறிவிப்பு மிக்க வரவேற்க தக்க விஷயம் தான், இதன் மூலம் நாட்டில் பதுக்கிவைத்துள்ள கள்ளநோட்டுக்கள் அடியோடு அழிய தான் இந்த திட்டத்தை வகுத்துள்ளனர்.
தற்போது அமலுக்கு வரும் இந்த திட்டத்தை திரைப்படம் மூலம் 9 வருட முன்பே சொன்னார் இயக்குனர் ஷங்கர்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் கள்ளநோட்டுக்களின் பதுக்களை பற்றியும் 500 , 1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தால் தான் கள்ளநோட்டுக்கள் அழியும் என்று ஷங்கர் திரைப்படம் மூலம் கூறினார்.
தற்போதைய செய்தி ஷங்கரின் சிவாஜி படத்தை தான் ஞாபகப் படுத்துகிறது. சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்திலும் இதைப்பற்றி கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
N5




