வெள்ளை மாளிகையில் ஓரு இலங்கை தமிழ் பெண்-கிருசாந்தி விக்னராஜா
பேர்ச்பொக்ஸ்- தமிழில் சமகளம்
இந்த மாதமும் ஏன் ஓவ்வொரு மாதமும் நாங்கள் சக்திவாய்ந்த ஓரு பெண்ணை கொண்டாடுகின்றோம். சமத்துவம் சமஉரிமை தொடர்பில் உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொள்கின்றோம். தங்கள் முன்னாள் காணப்பட்ட வலுவான கண்ணாடிகளை உடைத்தெறிந்த பெண்களை கொண்டாடுகின்றோம்.
அவ்வாறான பெண்களில் ஓருவர் கிருசாந்தி விக்னராஜா. அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணி மிச்சேல் ஓபாமாவின் லெட்ஸ் கேர்ல் லேர்ன் ( Let Girls Learn) திட்டத்தின் தூண்களில் ஓருவர், ஜெனரேசன் இம்பாக்ட் ( Generation Impact) என்ற நிறுவனத்தின் உரிமையாளர்.
யுவதிகளிற்கு உரிய வாய்ப்புகளை வழங்கினால் இந்த உலகை மாற்றலாம் என்ற வலுவான நம்பிக்கையால் வழிநடத்தப்படுபவர் கிருசாந்தி.
கிருசாந்தி சிறுமியாகயிருந்த காலப்பகுதியில் இலங்கையின் உள்நாட்டுப்போரிலிருந்து தப்பி தனது சசோதரன் மற்றும் பெற்றோர்களுடன் அமெரிக்காவிற்கு சென்றவர். அவரது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள். அவர்களே கல்வியின் முக்கியத்துவத்தை அவரிற்கு உணர்த்தியவர்கள். “உலகின் ஏனைய பெண்களை போல எனக்கும் கல்வியே ஓரு உலகை அறிவதற்கான கருவியாக விளங்கியது. எனது கண்களை திறந்து வைத்தது. எனது ஆளுமையை நானே உணர்வதற்கு வாய்ப்பை வழங்கியது” என்கிறார் விக்னராஜா.
அற்புதமான ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளின் துணையுடன் விக்னராஜா அரசியலில் பட்டப்பின்படிப்பை பூர்த்தி செய்தார். இதேபோன்று யாலே கல்லூரியில் (Yale College)தனது மூலக்கூறு உயிரியலில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அது போதாது என நினைத்த அவர் பின்னர் ஓக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலும் தனது கல்வியை தொடர்ந்தார்.
புத்துணர்வை, நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய ஆசிரியர்களிடம் கல்விகற்பதற்கும்,என்னுடைய நாளாந்த வாழ்க்கையில் அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த விடயத்தில் நான் கொடுத்துவைத்தவள் என்கிறார் அவர்.
தன்னுடைய அற்புதமான கல்விபயணத்தின் காரணமாக உலகின் பல பகுதிகளிலும் உள்ள பெண்கள் தங்கள் கனவுகளை பூர்த்தி செய்வதற்கு உதவ வேண்டிய கடப்பாடு தனக்குள்ளதை கிருசாந்தி உணர்ந்தார். இந்த தருணத்திலேயே மிச்செல் ஓபாமாவின் வருகை இடம்பெற்றது. முன்னாள் முதற்பெண்மணி பெண்கள் கல்வி கற்க வழிவிடுவோம் என்ற அமைப்பை ஆரம்பித்திருந்தார். இந்த அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் சிறந்த கல்வியை பெற்று தங்கள் முழு திறனையும் பயன்படுத்தக்கூடியவர்களாக மாறுவதற்கு உதவுவதை அடிப்படையாக கொண்டது.மிச்சேல் இந்த அமைப்பின் இயக்குநராக பணியாற்றுகின்றார். கிருசாந்தி அவருடன் இணைந்து பணியாற்றினார்.
எனினும் முன்னாள் முதற்பெண்மணி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியவுடன் கிருசாந்தியின் பணி முடிவடையவில்லை. அவர் ஜெனரேசன் இம்பக்ட் என்ற தனது சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த அமைப்பு இலாபநோக்கமற்ற ஸ்தாபனங்களை ஓன்றிணைத்து உலகில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய புதிய தந்திரோபாயங்களை நடைமுறைப்படுத்துகின்றது.
தற்போது விக்னராஜா கல்வி, தொழில் முயற்சி,பெண்களை வலுப்படுத்துதல்,போன்ற விடயங்களை கையாள்கின்றார். அவர் தனக்கு மிகவும் பிடித்த அந்த பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறார்.





