செய்திகள்
சோமலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலில் இருப்பவர்கள் இலங்கையர்கள்?
சோமலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கை கொடியுடன் சென்ற கப்பலில் இலங்கையர்களும் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கப்பல் அண்மையில் இலங்கைக்கு கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சென்ற கப்பலென்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்த கப்பல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு சர்வதேச நாடுகளின் உதவியை பெற நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




