சோமலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்க விசேட நடவடிக்கை
சோமாலியா கடற்கொள்ளையர்களினால் கப்பலுடன் கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை அமைத்துள்ளன.
இதற்காக கடற்பாதுகாப்பு நிறுவனங்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றன.
குறித்த கப்பல் கடத்தப்படும் போது அதில் இருந்த 8 பேரும் இலங்கையர்களே இவர்களை உடனடியாக மீட்குமாறு அவர்களின் உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை தமக்கு அனுமதி வழங்கப்படுமாகவிருந்தால் அவன்கார்ட் மூலம் அவர்களை மீட்டுக்காட்டுகின்றோம். என அந்த நிறுவனத்தில் பணிப்பாளர் நிசங்க சேனாரட்ன அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




