செய்திகள்

சோமாலியா கடற்கொள்ளையருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமிடையே மோதல்

சோமாலியா கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கையர்கள் உள்ள கப்பலுக்கு அருகில் சென்றுள்ள சோமாலியா பாதுகாப்பு தரப்பினருக்கும் கடற்கொள்ளையர் குழுவுக்குமிடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
கொள்ளையர் குழுவுக்கு உதவி பொருட்களுடன் சென்ற படகொன்றின் மீது சோமாலியா பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாகவும் இதனை தொடர்ந்து பதிலுக்கு அவர்களும் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த செய்தியை சோமாலியா பாதுகாப்பு பிரிவு மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)