செய்திகள்
வடக்கில் இராணுவ முகாம்களை நீக்குவதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் : மகிந்த கூறுகிறார்
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களுக்கு ஏற்றால் போன்றே செயற்படுவதாகவும் இதன்படி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வடக்கில் இராணுவ முகாம்களை நீக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




