சோகத்தில் ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் அவரின் நிலைமை கவலைக்கிடமானது. இந்த நிலையில் தந்தையை நினைத்து ஐஸ்வர்யா ராய் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் உள்ளாராம்.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
கடந்த வாரத்தில் இருந்து கிருஷ்ணராஜ் ராய் தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையிலும் அவரது உடல் நலனில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
ஐஸ்வர்யா ராய் தனது தந்தையின் செல்லம். எதுவாக இருந்தாலும் தந்தையிடம் தான் முதலில் கூறுவார். அப்படி இருக்கும்போது தந்தை ஐசியுவில் கவலைக்கிடமாக இருப்பதால் அவர் சோகத்தில் உள்ளார்.




