செய்திகள்

வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய வளாகத்தில் துப்பாக்கி ரவையும் வெடித்தகுண்டின் பகுதிகளும் மீட்பு

வவுனியா, தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய வளாகத்தில் குண்டுகள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (20.03) விசேட அதிரடிப்படையினர் நிலத்தினை ஆழப்படுத்திபோது பயன்படுத்த முடியாத துப்பாக்கி ரவைகளும் வெடித்த குண்டின் பகுதிகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப் பாடசாலை யுத்த காலத்தில் இராணுவத்தின் பிரதான இராணுவ முகாமாக செயற்பட்டிருந்த நிலையில் 2000 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகளினால் இராணுவதினர் மீது செய் அல்லது செத்துமடி என்னும் பெயரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது இப்பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறியிருந்தது.

இந் நிலைலில் இப்பகுதியில் பாடசாலை ஆரம்பித்து பல ஆண்டு காலமாக செயற்பட்டு வரும் நிலையில் வகுப்பறைகளுக்கு முன்பாக அலங்கார வேலைகள் செய்வதற்காக நிலத்தினை வெட்டியபோதே பாரிய அளவிலான துப்பாக்கி ரவை கண்டெடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து குண்டு செயழிலக்கச்செய்யும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு நிலத்தினை ஆழப்படுத்தியபோது அதனுள் இருந்து மேலுமொரு துப்பாக்கி ரவையும் வெடித்த குண்டுகளின் சில பகுதிகளும் காணப்பட்டது. இதனையடுத்து அவை மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

DSC03181 DSC03183

N5