காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஒருவாரத்திற்குள் அரசிற்கு 67 ஆயிரம் ரூபாய் வருமானம்: பதில் தான் இல்லை
வவுனியா பிரதான தபாலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு ஒரு வாரத்திற்குள் ஆறாயிரத்து 700 கடிதங்கள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும் எந்த பதிலும் வரவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்தை பொறுப்பு கூற வலியுறுத்தியும், அவர்களுக்கு நடந்தது என்ன என்பதை தெரிவிக்க கோரியும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கடிதங்கள் வீதம் அனுப்பப்பட்டு இதுவரை ஆறாயிரத்து 700 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கடிதம் அனுப்புவதற்காக கடிதங்கள் திரட்டப்பட்டு வருகின்றது. அரசாங்கத்திற்கு நாங்கள் அனுப்பிய இந்த கடிதம் மூலம் முத்திரை கட்டணமாக 67 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கின்றது. இருந்தும் பாதிக்கப்பட்ட எமது வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் அரசாங்கமோ அல்லது ஜனாதியோ அதற்கான எந்தவொரு பதிலையும் இதுவரை அனுப்பவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
N5




