மார்ட்டின் மக்கினஸ் 66ஆவது வயதில் காலமானார்
வட அயர்லாந்தின் சின்பெயின் இயக்கத்தின் முக்கிய நபர்களில் ஓருவரும் வட அயர்லாந் சமாதான பேச்சுக்களில் முக்கிய பங்காற்றியவருமான மார்ட்டின் மக்கினஸ் தனது 66 வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
மக்கினஸ் வடஅயர்லாந்தின் பிரதி முதல் அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் அபூர்வமான நோய் ஓன்றின்தாக்கத்தினால் அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்கினஸின் மரணத்தைஉறுதிசெய்துள்ள சின்பெய்ன் இயக்க தலைவர் ஜெரி அடம்ஸ் அவரின் மன உறுதியை பாராட்டியுள்ளார்.
1972 ம் ஆண்டு தனது 21 வயதில் ஐரிஸ் குடியரசு இராணுவத்தி;ல இணைந்த மக்கினஸ், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்துகொணடிருந்த 26 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரிட்டிஸ் படையினரால் கொல்லப்பட்ட கறுப்பு ஞாயிறு சம்பவம் இடம்பெற்றவேளை ஐரிஸ் குடியரசு இராணுவத்தின் இரண்டாவது முக்கிய தளபதியாக விளங்கியவர்.
லோர்ட் மவுன்ட்பட்டனும் 18 பிரிட்டிஸ் படையினரும் கொல்லப்பட்ட சம்பவம் 1979 இல் இடம்பெற்றவேளை மக்கினஸ் ஐரிஸ் குடியரசு இராணுவத்தில் முக்கிய பதவியில் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்நாட்டு போர் இடம்பெற்றவேளை சமாதான முயற்சிகள் குறித்து தனது தீவிர அக்கறையை வெளிப்படுத்தியிருந்த மார்ட்ன் மக்கினஸ் இராணுவதீர்வுகள் சமாதானத்தை எட்ட உதவும் என்பது போலியான எதிர்பார்ப்பு என தொடர்ச்சியாக தெரிவித்து வந்திருந்தார்.




