செய்திகள்

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் இலங்கை இணைந்துகொள்ளாது

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் இலங்கை இணைந்துகொள்ளாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம்  நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூலவிடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர் நிலையியல் கட்டளை 23/2இன் கீழ் விசேட The post கீழ் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் ஒருபோதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையப் போவதுமில்லை, அரசியலமைப்பை மீறி நீதிபதிகளை விசாரணைகளுக்காக நியமிக்கப்போவதும் இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்தார்.
இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட ரீதியில் அமைக்கப்படும் நீதிப் பொறிமுறையின் கீழ் விசாரணைகளை நடத்துவதற்கும், அவ்வாறான விசாரணைகளுக்கு பொதுநலவாய நீதிபதிகள், வழக்குரைஞர்களின் ஆலோசணைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் முன்வைத்திருக்கும் யோசனையையே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக முன்வைத்திருக்கும் அறிக்கை குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதற்கு இலங்கையின் பிரதிநிதி கால அவகாசம் கோரியுள்ளார். இவர் முன்வைத்திருக்கும் அறிக்கைக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளபோதும், அவர்கள் கூறும் விடயங்களுக்கு முழுமையான இணக்கப்பட்டைத் தெரிவிக்கவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும், பொறுப்புக் கூறல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என 2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான்கீ மூனும் இணைந்து வெளியிட்ட கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்த இணக்கத்தின் அடிப்படையிலேயே 2009ஆம் ஆண்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. முன்னை அரசாங்கம் விசாரணை நடத்த இணங்கியிருந்ததுடன், 2014ஆம் ஆண்டாகும் போது இது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. குறித்த பிரேரணைக்கு அமைய செயற்பட்டிருந்தால் சர்வதேசத்தால் அல்லது எம்மால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கவேண்டி ஏற்பட்டிருக்கும்.
சமகால அரசாங்கம் ஒற்றுமையைக் குலைப்பதற்கோ, இறைமையை விட்டுக் கொடுப்பதற்கோ அல்லது சர்வதேச நீதிபதிகளை அமர்த்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கோ இணங்கவில்லை. அவ்வாறானதொரு யோசனைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுமில்லை, பங்காளராகவும் இல்லை.
19ஆவது திருத்தச்சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தி ஜனநாயக ஆட்சியை ஊக்குவித்தல், நிறுவனங்களின் சுயாதீன செயற்பாட்டை உறுதிப்படுத்தல் என்பன குறிப்பிடப்பட்டிருந்தன. தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பது குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் மனித உரிமைகளை மதிப்பதற்கும் அதனை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகள் பாராட்டப்பட்டிருந்தன. அது மாத்திரமன்றி மோசடிகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகளும் பாராட்டப்பட்டிருந்தன.
கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய சம்பவங்களை ஏற்றுக் கொண்டு பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், நடுநிலையான மற்றும் சுயாதீனமான வெளிப்படையான, பரட்பம்சமற்ற உயர்ந்த தொழில்சார் நிபுணத்துவம் கொண்டவர்களின் ஊடாக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் 2015ஆம் ஆண்டு பிரேணையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அரசியலமைப்புக்கு உட்பட்டதாக நீதிப் பொறிமுறையொன்று அமைக்கப்படும் என்ற அரசாங்கத்தின் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2009ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா செயலாளர் நாயத்துடன் இணைங்கிய விடயங்கள் யாவும் இந்தப் பிரேரணை மூலம் நீக்கப்பட்டன. நாம் உருவாக்கும் நீதிப் பொறிமுறையானது அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும். அரசியலமைப்புக்கு வெளியே சென்று எதனையும் செய்யமுடியாது.
2017 மனித உரிமை பேரவை அமர்வில் இரண்டு விடயங்கள் பார்க்கப்பட வேண்டியுள்ளது. ஒன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை. சர்வதேச நீதிபதிகள் மற்றும் கலப்பு நீதிமன்றம் போன்ற விடயங்கள் அவருடைய அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கை தொடர்பில் அவருடைய அறிக்கையை அரசாங்கம் வரவேற்றுள்ளபோதும், அதில் உள்ள விடயங்களுக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
இந்த அறிக்கை குறித்து பதிலளிப்பதற்கு காலம் கோரியுள்ளோம். 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உண்மையை அறியும் ஆணைக்குழுவை அமைக்கும் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் நியூயோர்க் சென்று விசாரணை நடத்துமாறு கோரினார்கள். அது மாத்திரமன்றி 2014ஆம் ஆண்டு ஜெனீவா சென்றிருந்த ஜீ.எல்.பீரிஸ், மூதூர் வழக்கையும், திருகோணமலை வழக்குகளையும் நடத்தி வழக்குத் தாக்கல் செய்வதாகக் கூறியிருந்தார்.
இலங்கை ஒருபோதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து கொள்ளாது என்பதை ஜனாதிபதியும், நானும் பல தடவைகள் தெ ளிவாகக் கூறியுள்ளோம். இதுவே அரசாங்கத்தின் கொள்கை. சார்க் மற்றும் ஆசிய நாடுகளும் இவ்வாறான கொள்கையிலேயே இருக்கின்றன.
கடந்த அரசாங்கம் வழங்கிய கடன்களையும், விசாரணை நடத்துமாறு கோரிய விடயத்தையும் நல்லாட்சி அரசாங்கமே சரிசெய்ய வேண்டியிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க  மேலும் தெரிவித்தார்.
அரசாங்கமானது, அரசியலமைப்புக்கும் நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பிரேரணைக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனுசரணை வழங்கியிருப்பதாகவும், மீண்டுமொரு முறை இவ்வாறான பிரேரணையொன்றுக்கு அனுசரணை வழங்க முயற்சிப்பதாகவும் தினேஷ் குணவர்த்தன எம்பி குற்றஞ்சாட்டினார்.
n10