பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற நபர் எச்சரிக்கையின் பின்னர் சுடப்பட்டார்: நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் (படங்கள் )
பிரிட்டிஸ் பாரளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் பாரளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வாயில் ஊடாக உள்ளே நுழைய முயன்ற வேளை சுட்டுக்கொல்லப்பட்டார் என பிரிட்டனை உலுக்கியுள்ள பயங்கரவாத தாக்குதலை நேரில் பார்த்த ஊடகவியலாளர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மைக்கல் அடமோ தனது 453 இலக்க பேருந்தினை செலுத்திக்கொண்டிருந்த குறிப்பிட்ட வாகனம் பாராளுமன்றத்தை நோக்கி செல்வதையும் பாலத்தில் பொதுமக்களை இடித்து வீழ்த்துவதையும் பார்த்தேன் என்கிறார்.
கார் இருவரை இடித்து வீழ்த்துவதை நான் பார்த்தேன்-முதலில் நான் அது விபத்து என்றே நினைத்தேன்-அதன் பின்னர் பலர் பாராளுமன்றத்தை நோக்கி ஓடுவதையும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்த முயல்வதையும் கண்டேன்.
அதற்கு சில நிமிடங்களின் பின்னர் துப்பாக்கிசத்தங்கள் கேட்டன- எனது பேருந்தில் இருந்தவர்கள் அச்சமடைய தொடங்கினர்- நான் பலர் பாலத்தில் வீழ்ந்து அசையாமல் கிடந்ததை கண்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை வெஸ்ட்மினிஸ்டர் பாலத்திற்கு அருகில் பேருந்திற்காக காத்திருந்த இஸ்மேல் என்பவர் குறிப்பிட்ட கார் என்னை கடந்தே சென்றது என்கிறார்.
வீதிசமிக்ஞைக்கு அருகில் சிறிய கடையொன்று காணப்பட்டது அதற்கு அருகில் முதலில் ஓருவர் இடித்து வீழ்த்தப்பட்டார்-அதன் பின்னர் மேலும் இருவர் – அவ்வேளையே நான் ஏதொ நடைபெறுகின்றது என்பதை உணர்ந்தேன் என்கிறார் அவர்.
கார் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது எனக்கு என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை- பாலத்தின் முடிவில் பலர்நின்றுகொண்டிருந்தனர்- அவர்களை நோக்கி கார் வேகமாக சென்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலத்தின் மீது தாக்குதல் இடம்பெற்றதை நேரில் பார்த்த இன்னொரு நபர் ஸ்டீவ் வோக்:
நான் பாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தேன்-தீடிரென பேருந்து ஒன்று நின்றது- அதிலிருந்தவர்கள் கதறத்தொடங்கினர்-அதன் பின்னர் வீதியிலும் மறுபக்கத்திலும்; உடல்களை பார்த்தேன்- பாலத்தை பார்த்தவேளை நீரின் உள்ளேயும் உடல் ஓன்று காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபர் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதை பார்த்த டெய்லி மெய்ல் பத்திரிகையாளர் குவென்டின் லெட்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த நபரின் கரங்களில் ஏதோ ஓன்று காணப்பட்டது- அது தடிபோலயிருந்தது-அவரை சில பொலிஸார் துரத்திக்கொண்டிருந்தனர்- அவர்களில் ஓருவர் தீடிரென நிலத்தில் விழுந்தார்.
அந்த நபரின் நடவடிக்கையை பார்த்தபோது அவர் குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியிருக்கவேண்டும் என எனக்கு தோன்றியது.
பின்னர் அந்த நபர் பொதுச்சபையில் நுழைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வாயிலை நோக்கி செல்ல முயன்றார்-அவ்வேளை அவரை நோக்கி இரு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததுடன்- அவர் அதனை அலட்சியம் செய்தார்- அதன் பின்னர்அவர்கள் இரண்டு மூன்று தடவைகள் துப்பாக்கி பிரயோகம் செய்தனர் அவர் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

Palace of Westminster, London, after civilians attacked on Westminster Bridge and policeman stabbed and his apparent attacker shot by officers in a major security incident at the Houses of Parliament. Wednesday March 22, 2017.














