செய்திகள்

இலங்கை வருகிறார் ரஜினி

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 9ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ள வீடமைப்பு திட்ட திறப்பு விழாவில் கலந்துக்கொள்வதற்காகவே அவர் இலங்கை வருகை தரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லைக்கா நிறுவனத்தின் ஞானம் அமைப்பினால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்த விஜயம் தொடர்பாக ரஜினி தரப்பிலிருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)