ரதுபஸ்வல சூட்டு சம்பவம் தொடர்பாக 4 வருடங்களின் பின் 3 இராணுவத்தினர் கைது
2013ஆம் ஆண்டில் ரதுபஸ்வலவில் சுத்தமான குடிநீர் கோரி பிரதேசவாசிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக இராணுவத்தை சேர்ந்த மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இராணுவ கோப்ரல்கள் மற்றும் சிப்பாய் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு ரத்துபஸ்வல மக்கள் வெலிவேரிய நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பேர் மரணித்ததுடன் மேலும் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)




