செய்திகள்

90 ஓட்டங்களால் வென்றது பங்களாதேஷ் : 45.5 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து தோற்றது இலங்கை

நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
இதனடிப்படையில், முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, ஐம்பது ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய இலங்கை அணி 45.1 ஓவர் நிறைவில், சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. -(3)