செய்திகள்

வரம்பு மீறிய விஜய் சேதுபதியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட நாயகி! – நடந்ததுஎன்ன ?

படத்தில் ஒரு காட்சியில் நடிப்பில் வரம்பு மீறிய விஜய் சேதுபதியை சக நடிகையான மடோனா செபாஸ்டீன் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கவண்’. படத்தில் ‘பிரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டீன் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரித்தில் நடித்துள்ளார். ‘அயன்’ பட வில்லன் ஆகாஷ் தீப் சாய்கல் வில்லனாக நடித்துள்ளார். மேலும் விக்ராந்த், சாந்தின், ஜெகன், பாண்டியராஜன், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப் படத்துக்கு இசை – ஹிப் ஹாப் தமிழா. ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம். தயாரிப்பு – ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இந்தப் படம் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏற்கனவே இப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘கவண்’ படத்தை பிரபலப்படுத்தும் விதமாக அதில் இடம்பெறும் ஒரு காட்சி வெளியாகியுள்ளது. அந்தக் காட்சியில், கதாநாயகி மடோனா தனது கல்லூரி புராஜெட்டாக ஒரு படத்தை எடுப்பது போலவும், மொட்டை மாடியில் எடுக்கப்படும் அந்தப் படத்தின் காட்சியில் விஜய் சேதுபதியும், சாந்தினியும் நடிப்பது போலவும் அமைந்திருந்தன.

குறிப்பிட்ட அந்தக் காட்சியில், காதலன், காதலியான நீங்கள் இருவரும் பிரியப்போகும் நேரத்தில் கடைசியாக ஒரு முறை கட்டிப்பிடிக்க வேண்டும். இது உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி, சாந்தினி ஆகியோரிடம் விலக்கி விட்டுச் செல்வார் மடோனா. பின்னர் கேமராவை ஆன் செய்து அந்தக் காட்சிக்கு மடோனா ஆக்‌ஷன் சொன்னவுடன், விஜய் சேதுபதி – சாந்தினி ஆகியோர் நடிக்கத் தொடங்குவர்.

அவர்கள் இருவரும் நடிக்காமல் நிஜமாகவே கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதுடன், முத்துமும் கொடுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகும் மடோனா காட்சிக்கு ‘கட்’ சொல்கிறார். ஆனாலும் அவர்கள் விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து வேகமாகச் சென்று அவர்களை விலக்கியதுடன், கடுப்பான மடோனா, விஜய் சேதுபதியை கடுமையாகத் திட்டிவிட்டு, கடுப்புடன் அவரை மாடியிலிருந்து கீழே தள்ளி விடுகிறார்.

இத்துடன் அந்த விடியோ காட்சி நிறைவடைகிறது. சமீப காலமாக கோலிவுட்டில் வெளியாகும் புதிய படங்களில், அந்தப் படத்தை பிரபலப்படுத்தவும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தவும் இதுபோன்று சில காட்சிகளை வெளியிடுவது புதிய டிரெண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‘கவண்’ படத்திலும் இப்படி ஒரு காட்சியை வெளியிடப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.