செய்திகள்
வசூலை வாரி குவிக்கும் விஜய் சேதுபதியின் கவண்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ‘கவண்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுவருகின்றது.
விமர்சன ரீதியாகவும, வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பிவரும் இப்படத்தில், மடோனா, டி.ராஜேந்தர் என பலர் நடித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் சென்னையில் முதல் நாளில் மட்டும் 34 லட்ச ரூபாவும், தமிழ்நாடு முழுவதும் 3.10 கோடி ரூபாவும் வசூலித்திருக்கிறது.
இப்படம் சென்னையில் மட்டும் முதல் வாரத்தில் 1 கோடி ரூபாவை எட்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.




