நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடந்த அரசு முயற்சிக்கவில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் ஹக்கீம்
கடந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு நாட்டில் வாழும் சமூகத்தினர் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவத ற்கு இதய சுத்தியோடு முயற்சிக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைப் போக்கி இனங்களுக்கிடையிலான நம்பி க்கையை கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகவும் கூறி னார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரத்திணைக்களத்தின் துணைச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் கடந்த சனிக்கிழமை மாலை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப்பிரதிநிதியும் மனிதாபிமான இணைப்பாளருமான சுபினே நண்டி, ஐ.நா. அரசியல் விவகாரத்திணைக்களத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவர் மேரி யமசிடா ஆகியோரும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர். இந்த உரையாடல் ஒரு மணி நேரம் நீடித்தது.
யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் நாட்டில் இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கு முன்னைய அரசாங்கம் போதிய கவனஞ் செலுத்தாததற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததற்குமான காரணங்களை அறிந்து கொள்வதற்காக ஐ.நா. துணைச் செயலாளர் நாயகம் அமைச்சரிடம் சில கேள்விகளை எழுப்பினார்.
அவற்றிற்குப் பதிலளிக்கும் போது முஸ் லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக் கீம் மேலும் தெரிவித்ததாவது,எங்களது கட்சி பிளவுபடாது பாதுகாப்பதற்காகவும் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் குறைந்த பட்ச தேவைகளையாவது நிறைவேற்றுவதற்காகவும் விருப்பக் குறைவோடாவது மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தது.
யுத்தத்தை வெற்றி கொண்டு விட்டதாக இறுமாப்பில் இருந்த முன்னைய ஜனாதிபதி இனங்களுக்கிடையிலான துருவப்படுத்த லைக் குறைப்பதற்கும் விரிசலை நீக்குவத ற்கும் என வெறும் கண் துடைப்பிற்காக சில காரியங்களைச் செய்தாரே தவிர உண்மையான இதய சுத்தியோடு எந்தவிதமான பயனுள்ள முன்னெடுப்புக்களையும் அவர் மேற்கொள்ளவில்லை.
இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நியமித்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி யாக இருந்த இந்நாட்டு முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் இணைத்துக் கொள்ளப்பட வில்லை. அதுமட்டுமல்லாது சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராக இருந்த இடதுசாரி அரசியல் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூட அதில் இடம்பெறச் செய்யப்படவில்லை. வேண்டு மென்றே நாம் முன்னைய அரசாங்கத்தி னால் புறக்கணிக்கப்பட்டோம்.
சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக தெற்கில் இனவாதம் கட்டவிழ்த்து விடப்ப ட்டது. பொது பல சேனா மற்றும் பேரினவாதச் சக்திகளுக்கு அப்போதைய அரசாங்க உயர் மட்டத்தினரின் அனுசரணை கிடைத்தது. அவர்கள் போஷித்து வளர்க்கப்பட்ட னர்.
இனவாதம் மட்டுமல்லாது ஊழல் மற்றும் மோசடிகள் நிறைந்த அப்போதைய அரசாங்கத்திற்கு முடிவு கட்டுவதற்கு சிறுபான்மையினர் உட்பட நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் முன்வந்தனர்.
மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் பாராளு மன்ற சமநிலையைப் பேணுவதில் நிலவும் கருத்து வேறுபாடுகள் முந்திய ஜனாதிபதி யின் விசுவாசிகளின் செயற்பாடுகள் என் பன சவாலாக இருந்த போதிலும் நூறு நாள் திட்டத்தின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலொன்றை நடத்தி தேசிய அரசாங்க மொன்றை நிறுவி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகி யோர் மிகவும் முனைப்பாகவுள்ளனர்.
நான் நீதியமைச்சராக பதவி வகித்த போது பாராளுமன்றத்தில் சட்டமாக்க முன்வந்த முக்கிய சட்டங்களை முன்னைய ஆட்சி தடுத்து நிறுத்தியது என்றார்.




