செய்திகள்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பார்களா ?

உலக வரலாற்றில் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அழிவை உருவாக்கிய ஈழப்போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் படுகொலை நாளை நினைவு கூர்வதற்கு மட்டக்களப்பில் யார் தயாராக உள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.மூடிய அறைக்குள் நினைவு கூர்ந்து வெளியேறி விடும் கலாசாரம் மாற்றப்பட்டு பொது வெளியில் மக்களை ஒன்றிணைத்து எமக்கு நடந்த அவலத்தை வெளிக்கொண்டுவரும் ஆழுமை மட்டக்களப்பில் இன்னும் உருவாக வில்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

மதுசார தொழில்சாலை அமைப்பதற்காக அடிபடும் தலமைகள் தங்கள் இன மக்கள் அழிக்கப்பட்டதற்கு என்ன செய்தார்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று பலர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகும் நீதி கோரமுடியாத சமூகமாக மட்டக்களப்பு இருப்பது வேதனையே

காத்தான்குடி ஜிகாதாக்கள் தினம் அனுஷ்டித்து கடைகளை பூட்டுவதற்கு முஸ்லீம் சமூகத்திற்கு உரிமை உண்டு

யுத்த வெற்றி கொண்டாட்டத்திற்கு சிங்கள சமூகத்திற்கு உரிமை உண்டு என்றால் ஏன் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை
நினைவு கூர தமிழர்களுக்கு உரிமை இல்லை.

இங்கு உரிமை இல்லை என்பதை விட தமிழனிடம் திரானி இல்லை ஆழுமை இல்லை தலைமைத்துவம் இல்லை என்பதே உண்மை .

பாதிக்கப்பட்ட எவரும் தமிழ் தலைமைகளாக
இல்லாத போது பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அவர்கள் சிந்திக்க தவறிவிடுகின்றனர்.

இன்றுவரை தமிழின படுகொலைகளை ஒரு தேசிய துக்க தின நிகழ்வாக நடத்த முடியாது போயுள்ளது என்றால் தமிழர்கள் இந்த நாட்டில் எப்படி வாழ்கின்றார்கள் என்பதை சொல்ல வேண்டிய தேவை இல்லை

வரலாற்றில் இனி ஒருபோதும் இவ்வாறு நடக்க கூடாது என்பதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையும் அறமும் ஆகும். அதற்காகவாவது இதனை நினைவு கூர வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு சிவில்சமூகமாக ஒன்றிணைந்து நமக்கு நடந்த அவலத்தை நாமே உலகிற்கு சொல்லவேண்டும் என்ற நிலை என்று வருமோ அதை யார் முன்நின்று செய்வார்கள் என்பதே இன்று பலரது கேள்வியாக உள்ளது.

mullivaikkal