செய்திகள்

கூரான கத்தியால் ஒருவர் தாக்குவதை நேரில் பார்த்தோம்: லண்டன் தாக்குதலில் சிக்கியவர்கள் விபரிப்பு ( படங்கள்)

நன்றி  சிஎன்என்- தமிழில் சமகளம்

மக்கள் நிறைந்த அந்த கபேயிற்குள் திடீர் என பதட்டம் அதிகரித்தது.

நபர் ஓருவர் அலறியபடி அதன் கதவுகளை நோக்கி ஓடிவந்தார் நபர் ஓருவர் கத்தியுடன் இங்கு வந்துகொண்டிருக்கின்றார் என அவர் அலறினார். அதனை தொடர்ந்து அங்கு இருந்த அனைவரும் கபேயின் பின்பகுதிக்கு ஓடி பதுங்கிக்கொண்டனர் என அங்கு காணப்பட்ட எல்ஸ்பெத் ஸ்மெட்லி தெரிவித்துள்ளார்.

லண்டன் பிரிஜ்லிருந்து சிறிது தூரத்திலிருந்த எலியட் கபேயிற்குள் அவர் அவ்வேளை காணப்பட்டார். தீடீர் என பாரிய கத்தியுடன் நபர் ஓருவர் உள்ளே நுழைந்தார் என்கிறார் ஸ்மெட்லி அவ்வேளை அங்கிருந்த சிலரால் தப்பமுடியவில்லை.

 

chilling-moment-london-bridge-attackers-enter-borough-market-002

போரோ சந்தைக்குள் பயங்கரவாதிகள் பொதுமக்களை கத்தியால் குத்துவதற்கு தேடித்திருந்தபோது

முதலில் அந்த நபர் அங்கிருந்த பணிப்பெண்ணை தாக்கியுள்ளார். அந்த நபர் அந்த பெண்ணின் கழுத்தில் வெட்டினான் என ஸ்மெட்லி தெரிவித்தார். பின்னர் இன்னொரு நபரின் முதுகில் குத்தி விட்டு அந்த நபர் அங்கிருந்து ஓடியதை கண்டேன் என்கிறார் ஸ்மெட்லி.

உள்ளேயிருந்த நாங்கள் மற்றுமொரு நபர் கத்தியுடன் அங்கிருக்கலாம் என அஞ்சினோம். குழப்பத்தில் என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை என்கிறார் ஸ்மெட்லி. சனிக்கிழமை இடம்பெற்ற பயங்கரத்தின் ஓரு பகுதியே இது.

https://www.youtube.com/watch?v=k0ynlupwyIQ

மற்றைய பகுதியில் வான் ஓன்று பலரை மோதி தள்ளியிருந்தது.

பொரோ சந்தைக்கு அருகில் பாரிய குழப்பம் காணப்பட்டதை பார்த்தேன் என்கிறார் சைமன் தொம்சன். மக்கள் அச்சத்துடன் அலறியபடி ஓடத்தொடங்கினர் நான் பலர் நிலத்தில் வீழ்ந்திருக்க கண்டேன் டாக்ஸி சாரதியொருவர் அனைவரையும் தப்பியோடுமாறு சத்தமிட்டுக்கொண்டிருந்தார். பொலிஸார் உத்தரவிட்டதும் பலர் நிலத்தில் வீழ்ந்துபடுப்பதை காண்பிக்கும் வீடியோவொன்று வெளியாகியுள்ளது.

காவல்துறையினர் எங்களை நிலத்தில் வீழ்ந்துபடுக்கச்சொன்னார்கள் எழுந்திருக்கவேண்டாம் என்றார்கள் அப்பகுதியில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த ஓருவர்.

அப்லெபீ மீன்கடையின் உரிமையாளர் தனது கடைக்குள் தஞ்சம் புகுந்துள்ளவர்களை காப்பாற்றுவதற்காக கடையை இழுத்து மூடியதாக தெரிவிக்கின்றார்.
அதற்கு சில நிமிடங்களிற்கு பின்னர் துப்பாக்கிசத்தம் கேட்டது என்கிறார் அவர்.

தற்கொலை அங்கிபோன்ற உடையணிந்த நபர் ஓருவரை தனது நண்பர் ஓருவர் பார்த்திருக்கின்றார் என்கிறார் அப்லெபீ மீன்கடையின் உரிமையாளர். 90 நிமிடங்களிற்கு மேல் நாங்கள் அனைவரும் பதுங்கியிருந்தோம் ஆறு ஏழு துப்பாக்கிபிரயோகங்களை கேட்டோம் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

பொதுமக்களை நோக்கி வந்த வான்
லண்டன் பிரிட்ஜில் வாகனமொன்று நபர்களை இடித்துதள்ளியதை பார்த்தேன் என்கிறார் மார்க் ரொபேர்ட்ஸ். எந்த திசையைநோக்கி ஒடுவது என்பதே அந்த நேரத்தில் மனதில் காணப்பட்ட சிந்தனை என்றும் அவர் தெரிவிக்கின்றார். அந்த வான் மக்களை இலக்குவைத்தது போல தோன்றியது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

chilling-moment-london-bridge-attackers-enter-borough-market-001

பொலிஸாரால் சுடப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளின் நடமாட்டம்