செய்திகள்

பருவநிலைமாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவின் விலகலும் ஏற்படப்போகும் விளைவுகளும்

கலாநிதி.கே.ரீ.கணேசலிங்கம்

பருவநிலை மாற்றம் மனித சமூகத்திற்கு சவாலானதாக எழுந்துள்ளது. உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் இயற்கை மீது காட்டும் அணுசரனையை விட நிராகரிப்புத்தனம் அதிகரிக்க இயற்கையும் மனிதன் மீது எல்லையற்ற அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து மீளுவதற்கு மனித சமூகத்தை ஒன்றிணைக்கும் மகாநாடுகள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுக்கொரு தடவை நிகழ்த்தப்படுகின்றது. அந்த வரிசையில் பாரிஸ்ல் நிகழ்ந்து வரும் பருவநிலை மகாநாடு தனித்துவமிக்கதாக அமைந்துவருகிறது. அதிலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்ன் பருவநிலை மாற்றத்துக்கான உடன்பாட்டிலிருந்து வெளியேறுவதான அறிவிப்பானது அதிக குழப்பத்தை தந்துள்ளளது. இவ்வுடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை ஏற்படப்போகும் விளைவுகளை அலசுகிறது இக்கட்டுரை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ்ல் ஐ.நா தலைமையில் ஒன்றுகூடிய நாடுகள் ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கின. அந்த ஒப்பந்தத்தில் மிகப்பிரதான விடயங்களில் ஒன்றாக நிலக்கரி மற்றும் அனல்மின் நிலையங்களை வளர்ந்த நாடுகள் முற்றாக மூடுவதென்றும் வளரும் நாடுகள் படிப்படியாக மூடுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிரகாரம் ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் பதிய ஜனாதிபதி ட்ரம்ப் தனது தேர்தல் கால பிரச்சாரத்தில் கூட இத்தகைய உடன்படிக்கையை நிராகரித்திருந்தார். அமெரிக்காவின் தொழில் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் ட்ரம்ப் நிர்வாக இவ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறவதாக முடிவெடுத்துள்ளது.

சுற்றச்சூழல் விடயங்களை அமுலாக்குவதில் அமெரிக்காவின் கரிசணை இரண்டாவது பரீஸ் மகாநாடு மட்டுமானதல்ல. ஏற்கனவே பெரியளவிலான 2002 ஆம் ஆண்டு எட்டப்பட்ட கொயாட்டோ (Kyoto) உடன்படிக்கையிலும், அதன்பின்பு 2010 இல் நிகழ்ந்த கொப்பன்கேயன் மகாநாட்டிலும் அமெரிக்கா இவ்வாறுதான் செயல்ப்பட்டது. ஆனால் அதிக அரசியலும் கொஞ்சம் மனித நேயமும் உள்ளது போன்று கடந்த கால அமெரிக்க ஆட்சியாளர்கள் நடந்துகொண்டார்கள். பாரீஸ் மகாநாட்டில் முழுமையாக அமெரிக்க அரசியல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

புவிமேற்பரப்பில் வெப்பநலை அதிகரிப்பினை தடுக்கவும் புவிமேல் பகுதியில் மனித முயற்சியால் வெளியேற்றப்படும் நச்சுவாயுக்களால் அடைந்துள்ள இயற்கை மாசுபடல் தடுக்கவும் பல முயற்சிகளை ஐ.நா சபை முன்னெடுத்தள்ளது. ஓசோன் படலத்தை அழிவடையச் செய்யும் வளர்ந்த நாடுகளின் வாயுக்களின் வெளியேற்றம் பாரிய பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்திவருகின்றது. அழ்வின் வேகத்தை தடுக்கவும், அதிலிருந்து மனித சமூகத்தை பாதுகாக்குதம் நடவடிக்கையை அமெரிக்கா நிராகரிப்பது என்பது அபத்தமான அரசியலாகும். வெறுமனே அமெரிக்கா எழுச்சி மட்டும் உலகமாகிவிடாது. அமெரிக்காவின் அணுகுமுறையே கடந்தகாலங்களின் இயற்கையை பாதுகாப்பதற்கான ஐ.நா வின் உத்திகள் முறியடிக்கப்பட்டன. ஆனால் கொப்பன்கேயன் மகாநாட்டிலும் ஆசிய வல்லரசுகளின் பங்களிப்பு மேலோங்கியது.

epa-coal-fired-plants

குறிப்பாக சீனா, இந்திய இரண்டுமே கொப்பன்கேயனில் தலைமை தாங்கியது பொன்று பாரீஸ்லும் தலைமை தாங்க முன்வந்துள்ளது. சீனா பாரீஸ் உடன்படிக்கையின் முன்னையே ஒப்பமிட்டதுடன் அதன் தீர்மானத்துக்கு அமைவாக இயற்கையின் விதிகளுக்கு அமைவாக செயல்பட ஆரம்பித்துள்ளது. ஏறக்குறைய அதன் நிலகரிபாவனையை சடுதியாக சீனா குறைத்துள்ளது. சீனாவின் 20 சதவீத குறைப்பு என்பது வளர்ந்து வரும் நாடுகளுக்க முன்மாதிரியும் அதிக இலாபகரமானதென்பதுடன் இயற்கை நிராகரிக்கப்படாது இருப்பது மேலான வளர்ச்சி என சீனா கருதுகின்றது.

அமெரிக்காவின் தற்போதைய அணுகுமுறையானது அதனை தனிமைப்படுத்துவதாகவே அமையவுள்ளதென கணிப்பிடப்படுகின்றது. ஈரான் அமெரிக்காவின் தொழிற்துறைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் பாதிப்பதுடன் அமெரிக்கா பில்லியன் டொலர் கணக்கிலான இழப்பீட்டினை இவ்வுடன்பாட்டில் கையெழுத்துடுவதனால் ஏற்படும் எனவும், ஆனால் இந்திய, சீனா போன்ற நாடுகள் இவ்வுடன்படிக்கையினால் அதிக இலாபத்தினை அடையப்போகின்றன என்றும் கூறுவது நியாயமற்ற வாதம் என ஈரான் கூறுகின்றது.

இதில் இரண்டு பிரதான விடயத்தினை விளங்கிக்கொள்ள முடியும். ஒன்று அமெரிக்காவின் சுயலாப பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாதென கருதுகின்ற நிலைமை இது ஒரு குறுகிய வாத அரசியல் மனோநிலையாகும். இயற்கையின் சூழல் பாதிப்படையும் போது அதன் சீற்றம் அதிகரிக்குமென்ற உலகிலுள்ள எந்த மனிதனாலும் உணரமுடியும் அந்த வகையில் நோக்கினால் அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில்முயற்சிக்கான சந்தர்ப்பமும் அமைந்திருப்பது மட்டுமே அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் உத்தியாகவுள்ளது.

உலக வல்லரசானது ஐந்தொகை கணிப்பீட்டில் உலகத்தை ஆளமுடியாது. அத்தகைய கணக்குப்பார்க்கும் நலை ஏற்பட்டுவிடுவது என்பதே அதன் உலகளாவியவலு வீழ்ந்துவிட்டது என்பதே முதன்மையானதாகும். இத்தகைய பதிவிலான அமெரிக்கா கடந்த காலத்தினை விட தற்போது அதிகமான கடைப்பிடித்து வருகிறது.

இன்றைய உலகம் கடந்த காலங்களைப் போன்றல்ல. இது ஓர் அரசு பிற அரசுகளை அங்கீகரிப்பதிலும் அணைத்துக்கொண்டு செயல்ப்படுவதிலும் சலுகையும் முக்கியத்துயமும் பிற அரசுகளுக்கு வழங்கியதிலும் தங்கியுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் ஐந்தொகையைக் கடந்து அங்கீகாரத்துக்கான ஒத்துழைப்பம் உதவியும் அவசியமானது. அத்தகைய அரசுகளே நவீன அரசுகள் என ஜோசப் நை குறிப்பிட்டார். அதாவது பிற அரசுகளை எந்தளவிற்கு தனித்துவமான அரசு என ஒரு அரசு கருதுகின்றதோ அந்தளவுக்கு அந்த அரசு அங்கீகாரமிக்க தேசமாக மாற்றமடையும். பிற அரசுகளுக்க வாய்ப்புக் கொடுப்பதன் மூலம், சலுகை அளிப்பதன் மூலம் அரசுகளக்கிடையிலான நட்பும் உறவும் வளர்ச்சியடைகிறது.

அந்த வரிசைக்குள் இணைந்துள்ள நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலுள்ளது. அமெரிக்காவின் பாரீஸ் மநாட்டு முடிவானது மேலும் சீனாவையே முதன்மைப்படுத்தியுள்ளது. இது சீனாவின் மிகப் பிரமான உத்தியாக உள்ளது. இயற்கை விடயங்களில் ஐ.நாவின் கோரிக்கையை அங்கீகரித்து சீனா அதனூடாக ஐ.நாவையும் அதன் உறுப்பு நாடுகள் மததியிலும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விரும்;பிகளது நட்பினையும் வளர்த்துவிடுகிறது.

இரண்மாவது அமெரிக்க அரசியலில் வங்குரோத்துத்னம் பாரீஸ் மகாநாட்டில் வெளிப்படையாக இணங்கான முடிகின்றது. சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. உலகிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் எதிர்பார்க்கும் அடுத்த கட்டம் எதிர்காலம் சார்ந்த மனோநிலையாகும். தனது அடுத்த சந்ததிக்கான இருப்பின் உத்தரவாதமே முதன்மையானதாகும். இதனால் அமெரிக்காவின் நடவடிக்கை ஒவ்வொன்றும் உலகிலுள்ள நாடுகளால் மட்டுமல்ல பிரஜைகளாலும் மதிப்பிட்டடிருக்கம்இ அதனால் அமெரிக்காவின் அரசியல் விவேகமற்ற செயலாகவே பார்க்கப்படுகிறது.

trump

எப்போதும் அரசியல் மௌனமாக மனிதாபிமானம் மோலோங்கிய அமெரிக்கா ஆட்சியாளர்களே காணப்பட்டதென்பது இதுவரை காலமும் அவதானிக்கமுடிந்தது. ஆனால் தற்போது மட்டும் ட்ரம்ப் நிர்வாகம் வெளிப்படையான அரசியலாக செயல்ப்படுத்திவருகிறது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தின் பலவீனத்தைக் காட்டுகிறதா அல்லது புதிய நிருவாகத்தில் பலவீனமான அணுகுமுறையாக காணப்படுகிறதா? என்பது கேள்விக்குரியது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது தொழிலதிபர்கள் கொண்டுள்ள முக்கியத்துவத்தினை காட்டுவதுடன் ஒபாமா நிர்வாகம் இத்தகைய தொழிலதிபர்களது பல்தேசிய கம்பனிகளது பக்கம் சாய்றந்தாலும் பொது நோக்கில் சில அம்சங்களில் கவனம் செலுத்தியது. ஆனால் ட்ரம்ப்பை பொறுத்தவரை அவர் ஒரு தொழிலதிபர் என்ற வகையில் தீர்மானங்களை தனது வர்க்கம் கார்பாக திட்டமிடுகின்றார்.

இத்தகைய அமெரிக்காவின் அமெரிக்காவின் நடவடிக்கை உலக நாடுகளுக்கான உறவினை பாதிககும் விடயமாக அமையும். இயற்கைக்கான பாதுகாப்பென்பது உலக நாடுகளிலுள்ள அளைத்துக்குமான பாதுகாப்பு உலக நாடுகளை தனது அரசியல் பொருளாதார இலாபத்தக்காக மட்டுஅம அமெரிக்கா உறவு வைத்துள்ளது என்ற விமர்சனம் தவிர்க்கமுடியாதது. உலக நாடுகளின் பருவ நிலையில் பாதிப்பினை ஏற்படுத்திக் கொண்டு உறவினை பேணுவதென்பது அதன் ஆதிக்கத்தை மட்டும் வெளிப்படுத்த முயலுகிறது.

ஜனாதிபதி ட்ரம்ப் உடன்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கான காரணங்களில் ஒன்று சீனா, இந்தியாவுக்கு இலாபம் கிடைக்கும் ஒரு தலைப்பட்சமான உடன்பாடு என்பதாகும். உலகில் வளர்ந்த நாடுகள் என்ற தலைமையும் வேண்டும். அதெ நேர்தில் இலாபம் உழைப்பதில் வளர்ந்து வரும் நாடு போன்று செயல்பட வேண்டும். இது ஒன்றும் அரசியல்ல. வெறுமையான கணக்கு வழக்கும் இலாபம் மட்டுமேயாகும். இதனால் உலகத்தை தலைமை தாங்க முடியாது. உலகத்திலுன்ன அனைத்த நாடுகளையும் சமமாக மதிக்கப்படும் உரிமைகளையும் சட்டங்களையும் கொண்டுள்ள ஐ.நாவை தமது நலனுக்கு பயன்படுத்திய அமெரிக்க அரசியல் பொருளாதார அணுகுமுறையைப் போன்று சுற்றுச்சூழல் சார்ந்து சாத்தியப்படுத்த முடியவில்லை. இது அமெரிக்கா உலகளாவிய தலைமைத்துவத்திற்கான சவாலாக உள்ளது.

சீனா இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தனது சவாலான நாடுகளான கருதுவதாலும் அவை முழுமையான வளர்ச்சியடைந்துள்ளன எனவும் கருதுகிறது. இதனால் சீனா – இந்தியாவுக்குள்ள சலுகைகளை அமெரிக்காவுக்கு வழங்கவேண்டுமென கருதுகிறது.

இதில் சீனா இந்தியாவுக்கு பலமான வாய்ப்பு உண்டு. உலகத்திற்கு தலமைதாங்கும் தகமையை உருவாக்கிக் கொள்ள முனையும் சீனா சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பினை தனக்கான மென் அதிகார உத்தியாக பிரயோகித்து வருகிறது. பாரீஸ் உடன்படிக்கையானது சீனாவை ஆசிய ஆபிரிக்க வட்டகையில் மட்டுமல்ல அமெரிக்க, ஐரோப்பியக் கண்டத்திலும் அங்கீகரிக்கம் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை நிராகரிக்கும் அமெரிக்க நட்பு நாடுகள் சீனாவின் பக்கம் சாய்வதுடன் உலக இருப்பின் எதிர்காலம் பற்றிய உரையாடலை சீனாவிடமிருந்து அவை எதிர்பார்க்கின்றன.

இலங்கையில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 2.3 மில்லியன் அ.டொ வழங்கவுள்ளது மேலும் அமெரிக்கா சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID ) அங்கமான வெளிநாட்டு அனர்த்த உதவிக்கான அலுவலகம் (OFDA ) அனர்த்த உதவி மற்றும் அனர்த்த ஆபத்து குறைப்பிற்காக 125 மில்லியன் அ.டொ வழங்கவுள்ளது என்ற செய்தியின் அர்த்தத்தினை புரிந்து கொள்வது அவசியமான பாரீஸ் உடன்பாட்டை நிராகரித்துவிட்டு உதவியும், கடனையும், நன்கொடையையும் வழங்கக் கொண்டு அமெரிக்கா உலகத்தை ஆளுகை செய்ய அவாப்படுகிறது.

இது ஓர் ஆபத்தான அரசியல் தந்திரம் உலகிலுள்ள முன்னைய அமெரிக்க தலைவர்கள் வெளியே மட்டுமென்றாலும் இவ்வகை உடன்படிக்கையில் தமது பங்களிப்பை வெளிப்படுத்தினர். ஆனால் புதிய ஜனாதிபதி அதனை எல்லாம் புறக்கணித்து விட்டு அமெரிக்காவின் உண்மை முகத்தினை காட்டியுள்ளார். இதனால் அமெரிக்காவுக்கும் – உலகத்துக்குமான உறவில் ஒரு விரிசல் தவிர்க்கமுயாததாக அமையவுள்ளது.

கார்டியன் பத்திரிகை குறிப்பிடுவது போல் மீளப்புதுப்பிக்கும் சக்தியிலிருந்து சீனா தனது மின்சார தேவையில் 1/5 பங்கினை உற்பத்தி செய்து வருகிறது. இது அமெரிக்காவின் உற்பத்தியை விட பலமடங்கு அதிகமானது. நிலக்கரியில் சீனா அதிகம் தங்கியிருக்கும் நிலையில் 130 கோடி பிரஜைகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை மாற்றிக்கொள்ள பெய்ஜிங் அதின் உத்தரவாதங்களை வளங்கியதுடன் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டது. கடந்த வருடத்திலிருந்து சீனா அதிக பிரயத்தனத்தினை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இவை யாவும் சர்வதேச அரங்கில் தன்னை நிலை நிறுத்த வேண்டுமென சினா விரும்புவது தெளிவாக உள்ளது. அமெரிக்காவின் வெற்றிடத்தை சீனா நிரப்பவுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனா தனது காலடியை விரிவுபடுத்தக் கொண்டிருக்கிறது. புதிய வீதிகள் துறைமுகங்கள் தொடக்கம் வங்கி கடன்கள் சக்தி திட்டங்களில் தனது காலடியை சீனா பதித்துவருகிறது என கார்டியன் குறிப்பிடுகின்றது.

எனவே பருவநிலை மகாநாடு சீனாவின் உலகளாவிய பலத்தினை மேலும் ஒருபடி பரப்ப உதவியுள்ளது. அமெரிக்காவுக்கு பதில் சீனா என்ற பரப்புகை உலகளாவிய அரசியலின் புதியபோக்கானதாக அமையவுள்ளது.