செய்திகள்

தென்னிந்திய படங்களிலேயே முதல்முறையாக `மெர்சல்’ படத்திற்கு கிடைத்த புதிய கவுரவம்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’.விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். அதற்கிடையே `மெர்சல்’ படத்திலிருந்து “ஆளப்போறான் தமிழன்”, “நீ தானே” என்ற இரு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
தினம் தினம் விருந்து என்று கூறும் வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை விஜய் ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டு வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அத்துடன் `மெர்சல்’ படத்தை டிரெண்டாக்கியும் வருகின்றனர். அந்த வகையில், படக்குழு இன்று ஒரு ரூசிகர தகவலை வெளியிட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக `மெர்சல்’ படத்திற்கான எமோஜியை படக்குழு அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுஒருபுறம் இருக்க, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை விஜய்யின் நெருங்கி நண்பரும், `மெர்சல்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ரம்யா சுப்ரமணியம் இணைந்து தொகுத்து வழங்க இருக்கின்றனர்.
மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவை தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் யுடியூப்பிலும் நேரடி ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில், விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். (15)201708181706284006_Mersal-Becomes-The-First-South-Indian-Movie-For-This-Major_SECVPF