செய்திகள்

திரிஷா, நயன்தாரா பாணிக்கு மாறுகிறாரா ஓவியா?

களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா அடுத்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடந்த 2 வருடமாக பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்தார். தற்போது அவரது மார்க்கெட் சூடுபிடித்திருக்கிறது. லாரன்ஸ் நடிக்கும் காஞ்சனா 3ம் பாகத்தில் நடிக்கிறார் ஓவியா. சிலுக்குவார் பட்டி, ஓவியாவைவிட்டா யாரு போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் 10 வருடம் கமர்ஷியல் ஹீரோயின்களாக நடித்தனர்.
தங்களுக்கென ஒரு பெயர் கிடைத்தபிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடிக்கத் தொடங்கினர். டோரா, அறம், மாயா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நயன்தாரா நடித்தார். ‘நாயகி’ படத்தையடுத்து தற்போது மோகினி உள்ளிட்ட 2 படங்களில் திரிஷா நடிக்கும் கதைகளில் அவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
அதாவது இவர் ஏற்றிருப்பதும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்கள்தான். அவர்களை பார்த்து ஓவியாவுக்கும் முக்கியத்துவம் உள்ள ஹீரோயின் வேடங்களில் நடிக்க ஆசை வந்திருக்கிறதாம். தற்போது ஒரு படம் அதுபோன்று வந்திருக்கிறதாம். ஆனால் என்ன கதை? யார் இயக்குவது? என்பதை இப்போதைக்கு சொல்லமாட்டாராம்.(15)