முன்பு போல் என்னைத் தேடி வரும் எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை- ஹன்சிகா
ஹன்சிகா நடித்த குலேபகாவலி படம் ரிலீசாகியுள்ளது. இதையடுத்து அதர்வாவுடன் ஒரு படத்திலும், விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை என்ற படத்திலும் நடித்து வரும் அவர் கூறியதாவது: இப்போது நான் அதிக படங்களில் நடிப்பதில்லை என்று சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. அடுத்து அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் நடித்து வருகிறேன். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தவிர மலையாளத்திலும், தெலுங்கிலும் நடிக்க உள்ளேன். முன்பு போல் என்னைத் தேடி வரும் எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. எனக்குப் பொருத்தமான கேரக்டரைத் தேர்வு செய்து நடிக்கிறேன். நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருக்க வேண்டும். கிளாமருக்கான முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டேன்.
நான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுக்காகவும், முதியோர் இல்லம் அமைப்பதற்கும் மும்பை புறநகர் பகுதியில் இடம் வாங்கியிருக்கிறேன். அதில் கட்டிடம் கட்ட நிறைய பணம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. குழந்தைகளுக்காக இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறேன். விரைவில் புதிய கட்டிடம் கட்டத் தொடங்கிவிடுவேன். குழந்தைகள் என் பாதுகாப்பில் நல்லமுறையில் வளர்ந்து வருகிறார்கள். நன்றாகவும் படிக்கிறார்கள்.(15)




