இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பாரத் ரத்னா விருதுக்கு அடுத்த படியாக நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது.
பத்மஸ்ரீ விருது வென்றவர்கள்:
கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள் (98)
அரவிந்த் குப்தா – இலக்கியம் & கல்வி
லட்சுமிகுட்டி – மருத்துவம்
பாஜு ஷியாம் – கலை
சுதன்ஷு பிஸ்வாஸ் – சமூக சேவை
எம்.ஆர். ராஜகோபால் – மருத்துவம்
முர்லிகந்த் பெட்கர் – விளையாட்டு
ராஜகோபாலன் வாசுதேவன் – அறிவியல் மற்றும் பொறியியல்
சுபாஷினி மிஸ்ட்ரி – சமூக சேவை
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் – இலக்கியம் மற்றும் கல்வி
சுளகட்டி நரசம்மா – மருத்துவம்
யீஷிதொடன் – மருத்துவம்(15)




