ஜனாதிபதிக்கு வியட்நாம் அழைப்பு
வியட்நாம் தூதுவர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது, வியட்நாம் – இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், வியட்நாமுக்கு ஜனாதிபதியை விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி, சுற்றுலா மற்றும் சமூக தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
மேலும் இச் சந்தர்ப்பத்தில் வியட்நாம் அரசாங்கத்தால் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




