செய்திகள்

பட வாய்ப்புக்காக உடல்தோற்றம் மாற்றிய அஞ்சலி

எங்கேயும் எப்போதும், கலகலப்பு என பல படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி. தமிழில் நடித்து வந்தவர் திடீரென்று தெலுங்கிலும் நடிக்கத் தொடங்கினார். பிஸியாக நடித்துவந்த நிலையில் அஞ்சலி உடல் எடை அதிகரித்து வெயிட் போடத் தொடங்கினார். இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. அதேசமயம் கொழுக் மொழுக் தோற்றத்தில் ஒரு சில படங்களில் வாய்ப்பு வந்தது. தமிழில் கடைசியாக ‘பலூன்’ படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்தார். இப்படத்தின்போது ஜெய், அஞ்சலிக்கு இடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசு பரவியது. அதுபற்றி அவர்கள் உறுதி செய்யாவிட்டாலும் பல நேரம் ஜோடியாக டேட்டிங்கில் ஈடுபட்டனர். இணைய தள டுவிட்டர் வாயிலாக அடிக்கடி ஜெய்யை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் அஞ்சலி. திடீரென்று அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிப்பிலிருந்து ஒதுங்கி இல்லறத்தில் ஈடுபட எண்ணியிருந்த அஞ்சலி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாற உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என கடுமையான பயிற்சிகளை கடைபிடித்தார். அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் தனது ஒல்லியான தோற்றத்தை புகைப்படம் எடுத்து இணைய தளத்தில் பகிர்ந்திருப்பதுடன் தெரிந்த இயக்குனர்களின் பார்வைக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.(15)5a5c9d3864c70-IBCTAMIL