மீண்டும் டைனோசர் மிரட்டல்
ஜுராசிக் பார்க் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் அடுத்து, ஜுராசிக் பார்க் ஃபாலன் கிங்டம். ஓவன் (கிறிஸ் ப்ராட்) மற்றும் கிளாரி (ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட்) ஆகிய இருவரும், அழிந்துவரும் டைனோசர் இனத்தைக் காக்க முற்படும் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது சிலரது சதிச்செயல்கள் பேராபத்துகளுக்கு வழிவகுக்கிறது.
‘இண்டோராப்டர்’ என்ற அபாயகரமான டைனோசர் கட்டுக்காவலில் இருந்து தப்பிவிடுகிறது. அதன் பிறகு நடக்கும் திரில் கலாட்டாதான் படம். 1993லிருந்து அனைத்து ஜுராசிக் தொடர் படங்களிலும் நடித்துள்ள ஜெஃப் கோல்ட்ப்ளம், இப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தயாரித்துள்ளார். பயோனா இயக்கியுள்ளார். தமிழிலும் இப்படம் ஜூன் 7ல் ரிலீசாக உள்ளது.(15)




