செய்திகள்

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்காலத்தடை

தமிழகத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சியான சீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது.

இந்நிகழ்ச்சி தனி மனித சுதந்திரத்தை பாதிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்சியை நடிகையும், இயக்குநருமான இலட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கியதும், குறித்த நிகழ்சி ஒளிபரப்பப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை பல சர்ச்சைகள் நிலவி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.(15)