செய்திகள்

தூத்துக்குடியில் மவுன அஞ்சலிக்கு பின் காலா திரைப்படம் ; படம் எப்படி உள்ளது ரசிகர்கள் கருத்து

பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு வெளியானது. இந்த பட்டம் உலகம் முழுவதும் மிகவும் சாதகமான விமர்சனங்களை மற்றும் தரவரிசைகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கர்நாடகாவில் காலா படம் வெளியாகவில்லை. தியேட்டர் வாசலில் அந்த அமைப்பினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

தூத்துக்குடியில் உள்ள தியேட்டர்களில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தவர்களுக்கு ரசிகர்கள் மௌன அஞ்சலி செலுத்திய பின்பே படம் திரையிடப்பட்டது. (15)