செய்திகள்
“96 படத்துக்கு பிறகு பொறுப்புகள் அதிகரித்து உள்ளன” – திரிஷா
96’ படத்தில், விஜய் சேதுபதியுடனான காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பிற மொழிகளிலும் இந்த படத்தை எடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.திரிஷா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘96’ படம் என் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்திருக்கிறது. எங்கு போனாலும் என்னை ‘ஜானு’ என்று பாசத்துடன் அழைக்கிறார்கள். இந்த படத்தால் எனக்கு பொறுப்புகள் கூடியிருக்கின்றன. நல்ல படங்களை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.(15)




