“தமிழன் இலங்கையில் அடங்கிப் போகமாட்டான்” என்ற நம்பிக்கையுடன் விடைபெற்றார் லீ குவான்
ஈழத் தமிழ் மக்களின் ஒரு உண்மையான நண்பனாக இருந்த சிங்கப்பூரின் ஸ்தாபக தந்தை லீ குவான் ஜியூ தமிழ் மக்களின் பால் ஒருவித அதீத விருப்பத்தையும் மரியாதையையும் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் உரிமைகள், நீதி மற்றும் விடுதலைக்காக இறுதிவரை குரல் கொடுத்த லீ குவான், ஈழ தமிழ் மக்கள பற்றி பேசும்போதெல்லாம் அவர்களின் ஆற்றல்கள் மற்றும் திறமைகள் பற்றி உயர்வாக குறிப்பிடுவதற்கு தவறுவதில்லை.
1959 ஆம் ஆண்டு சிங்கப்பூர் என்ற நகர தேசத்தை ஸ்தாபித்து 6 வருடங்களின் பின்னர் 1965 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது, சிங்கப்பூரை நீங்கள் எவ்வாறு கட்டியெழுப்ப விரும்புகிறீர்கள் என்பதற்கு ஏதாவது மாதிரி உதாரணம் இருக்கிறதா என்று லீயிடம் கேட்டபோது சற்றும் தாமதிக்காமல் சிலோனைப் (இலங்கை) போல சிங்கப்பூரை ஆக்க விரும்புவதாக கூறியிருந்தார். ஆனால் , அதே லீ பின்னர் 1980 ஆம் ஆண்டு இலங்கை பற்றி குறிப்பிட்ட போது , ” ஒரு நாடு எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இலங்கை ஒரு உதாரணம் ” என்று கூறியிருந்தார்.
அதன் பின்னர் பல தடவைகள் அவர் இலங்கை பற்றியும் அதன் ஆட்சியாளர்கள் பற்றியும் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் தேசிய இனங்களுக்கு பாதகம் ஏற்படுத்தும்
ஒரு மனிதன், ஒரு வோட்டு ” ( One Man, One Vote) என்ற கோட்பாடு ( நாட்டின் எந்தப் பகுதியில் வாழும் ஒருவரின் வாக்கு ஏனைய எந்த பகுதியில் வாழும் மற்றொருவரின் வாக்குக்கு சமனானது ) காரணமாக மிகவும் துடிப்பும் ஆற்றலும் மிக்க கடின உழைப்பாளர்களான சிறுபான்மை தமிழ் மக்களை பெரும்பான்மை சிங்கள மக்கள் ஆதிக்கம் செய்வதற்கு வழிவகுத்து அவர்களை பாதித்தது என்று 1998 ஆம் ஆண்டு தெரிவித்த லீ குவான், தமிழர்கள் ஆங்கிலத்தில் கல்வி பயின்றிருந்ததாகவும் ஆனால் ஆங்கிலம் இல்லாமல் செய்யப்பட்டு சிங்களம் கொண்டுவரப்பட்டது என்றும் இதனால் கல்வி ரீதியில் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ” அவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தற்போது தீவிரவாத புலிகளாக மாறிவிட்டார்கள் என்று அப்போது குறிப்பிட்ட லீ, “இலங்கை ஒருபோதுமே மீண்டும் ஒன்றுபடுத்தப்படாது” என்றும் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கருத்து தெரிவித்த அவர், ” இலங்கை ஒரு மகிழ்ச்சியான ஐக்கியப்பட்ட ஒரு நாடு இல்லை. சிங்களவர்கள் தமிழ் புலிகளை தோற்கடித்திருப்பது உண்மைதான். ஆனால், பெரிதும் ஆற்றல் நிறைந்த யாழ்ப்பாணத் தமிழர்களை ஆற்றல் குறைந்த சிங்களவர்கள் அடக்குகிறார்கள். அவர்களை பிழிந்தெடுக்கிறார்கள். அதனால் தான் தமிழர்கள் கிளர்ந்தெழுந்தனர் ” என்று குறிப்பிட்ட அவர், தமிழ் மக்கள் இலங்கையில் இனச் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆனால் தமிழ் மக்கள் அடங்கிப்போய்விடுவார்கள் என்று தான் நம்பவில்லை என்றும் கூறினார்.
2011 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸவை ஒரு ” சிங்கள தீவிரவாதி” என்று லீ விபரித்திருந்தார்.
நவீன சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகியவற்றுக்கு தமிழ் மக்களின் பங்களிப்பு குறித்து தெரிவித்த லீ, தமிழ் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதைவிட அவர்கள் நிறையவே செய்திருப்பதாக கூறியதுடன், அவர்கள் தாம் ஒருசிறுபான்மையினர் என்று எந்த சிறப்பு சலுகைகளையும் எதிர்பார்க்கவில்லை என்றும் தமது திறமை அடிப்படையிலேயே தாங்கள் கருதப்படவேண்டும் என்றும் ஏனைய பிரஜைகளுடன் எந்தவித பாகுபாடு இன்றி நேர்மையாக போட்டிபோடுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்றுமே எதிர்பார்த்ததாகவும் தெரிவித்தார்.
லீ குவானின் வாழ்க்கையை விபரிக்கும் ஆங்கில காணொளி:
[youtube url=”https://www.youtube.com/watch?v=vq_I90EDRzM” width=”500″ height=”300″]




