ஐ.நா. அறிக்கை வரும்போதே தீர்வுக்கான கதவுகள் திறக்கப்படும்: சுரேஷ் பிரேமச்சநதிரன்
சர்வதேச விசாரணை அறிக்கைகள் வெளிவருகின்ற போது தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான கதவுகள் திறக்கப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் பகுதியில் ஈழ மக்கள் புரட்சி கர விடுதலை முன்னணியின் மாவட்ட காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“ஐ.நா. சபையின் அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. இது வெளிவருகின்ற போதுதான் பல விடயங்கள் வெளிவரும். அதாவது ஏன் இலங்கையில் யுத்தம் தொடங்கியது? இந்த யுத்தத்தின் காரணகாரியங்கள் என்ன? இந்த யுத்தத்தால் எவ்வளவு அழிவுகள் ஏற்பட்டுள்ளன? இந்த நாட்டில் மேலும் ஒரு யுத்தம் வராமல் இருக்க வேண்டுமென்றால் இலங்கை அரசாங்கம் எவ் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல விடயங்கள் இந்த விசாரணை அறிக்கையில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகவே இந்த ஐ.நா. சபையின் விசாரணை அறிக்கைகள் என்பது மிக முக்கியமானது. இந்த அறிக்கைக்கு பதிலீடாக இலங்கை அரசாங்கம் தாம் இந்த அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்து வந்த நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கமும் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் விசாரணைகள் நடத்துமானால் அது ஒரு நம்பத்தகுந்த விசாரணையாக இருக்காது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ் விசாரணைகள் கால நேரத்தை கடத்துவதற்காக உலகத்தை ஏமாற்றுவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக இந்த உள்ளக விசாரணைகள் நடத்தப்படலாமே தவிர தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.
காணாமல் போனவர்கள் சம்பந்தமாக மட்டக்களப்பில் ஒரு குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. அம்பாறைக்கு வரயிருக்கின்றார்கள். முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் விசாரணைகள் செய்துள்ளார்கள். இது சம்பந்தமான இடைக்கால அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இன்று சுமார் 20 ஆயிரம் பேருக்கு மேல் காணாமல் போயுள்ளதாக மனு கொடுக்கப்பட்டிருந்தும் இதுவரை ஒருவரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு பதிலாக இந்த குழு மரண சான்றிதழ் கொடுக்கின் றது. எனவே இது போன்று தான் யுத்த குற்ற உள்ளக விசாரணைகளை அரசாங்கம் நடத்தி னாலும் அதுவும் இவ்வாறான குழுவாகத் தான் இருக்கும் என்பதுதான் உண்மையான விடமாகும். எனவே ஐ.நா. சபையின் சர்வதேச விசாரணை அறிக்கைகள் வெளிவருகின்ற போது தமிழ் மக்களின் இனப்பிரச் சினை தீர்வுக்கான கதவுகள் திறக்கப்படலாம் என்றார்.




