செய்திகள்

மணிரத்னம் கையிலெடுக்கும் சரித்திர படம்

இயக்குனர் ராஜமவுலி, ‘பாகுபலி’ சரித்திர படத்தை இயக்கினார். முதல் மற்றும் இரண்டு பாகங்களாக வெளியாகி இப்படம் ஹிட்டானது. இதையடுத்து சரித்திர படங்களை உருவாக்கும் முயற்சிகளை மேலும் சில இயக்குனர்கள் கையிலெடுத்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி. சங்கமித்ரா சரித்திர படத்தை இயக்க முடிவு செய்தார். இதில் ஜெயம் ரவி, ஆர்யா நடிக்க ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க விருந்தார். இதற்காக வாள் சண்டை பயிற்சியும் பெற்றார். ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து விலகினார். ஸ்ருதி விலகினாலும் படத்தை டிராப் செய்துவிடாத சுந்தர்.சி வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இப்படத்தை இயக்குவதற்கான ஆயத்த பணிகளையும் அவர் செய்து வருகிறார்.

சரித்திர படம் இயக்கும் எண்ணம் மணிரத்னத்துக்கும் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்க அவர் பல ஆண்டாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் விஜய், விக்ரம், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், சிம்பு ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நான் ஈ படத்தில் நடித்த நடிகர் நானியையும் முக்கிய வேடத்தில் நடிக்க பேசி வருகிறார் இயக்குனர் மணிரத்னம்.(15)