மதங்களை மதித்த மறவர்கள்
இரத்தமும் சதைகளும் அழுகை சத்தமும் கேட்ட
யுத்தத்தின் வடுக்களை எம்முடன் சுமந்தவர் நாம் !
முற்றத்தில் வீழ்ந்த பெரும் குண்டுகள் வெடித்துச் சிதற
செத்தவர் பலரை கண்களால் கண்ட சாட்சிகள் நாம் !
தேவாலயங்கள், ஆலயங்களை எதிரிகள் தேடியழிக்கையில்
பாவ புண்ணியக் கணக்குகள் ஏதும் பார்க்கவேயில்லை…!
ஏவு கணைகளை எம்மினத்தின் மீது ஏவிக் கொல்லகையில்
காவு கொள்ளப்பட்டவர்க்கழ உலகின் கண்களில் கண்ணீரில்லை !
மதங்களை மதித்துப் போரிட்ட மறவர்களைக் கண்டோம்
மதம் கொண்டு ஈழத்தில் தமிழினத்தை அழித்தவரை எதிர்க்க
அறவழி நின்றே அவர்கள் போர்களை நடாத்தியது கண்டோம்
புறமுதுகில் பகைவரை குத்திட என்றும் அவர்கள் நினைத்ததேயில்லை
-கொற்றவை




