சிங்கள ராவய அமைப்பின் பின்னணியில் இருப்பது கோதாபயவா?
சிங்கள கடும்போக்கு அமைப்பான சிங்கள ராவய அமைப்பின் பின்னணியில் இருப்பது கோதாபய ராஜபக்சவா என கண்டி மாநகரசபை உறுப்பினர் அசாத்சாலி கேள்வி எழுப்புகிறார்.
நேற்று பலங்கொட குரகல என்ற பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் தொல்பொருள் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இந்த பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள் செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அறிந்தும் சுமார் 150க்கும் மேற்பட்ட சிங்கள ராவய அமைப்பினர் வருகை தந்திருந்தனர். இவர்களை கலைக்க பொலிசார் தண்ணீர் பிரயோகம் செய்துள்ளனர்.
கடந்த வருடமும் இப்படி அத்துமீறி முஸ்லிம்களின் புனிதபூமியில் நுழைந்து குழப்பம் விளைவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னியில் இருப்பது கோதாபயவாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அசாத்சாலி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நடந்த பிரச்சினைக்கு அவர்தான் காரணம் என தான் வெளிப்படையாக கூறியதாகவும் தெரிவித்தார்.




