நாட்டுக்கு பாதுகாப்பில்லை ஜனாதிபதி மைத்திரி பதவி விலக வேண்டும்.: பொது பல சேனா
தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு தீர்வு காண கைபொம்மையல்லாத முதுகெலும்புள்ள ஜனாதிபதியே வேண்டுமெனவும் இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலக வேண்டுமெனவும் பொது பல சேனா தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முன் வைத்த 100 நாள் வேலைத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர் விடுதலைப் புலிகள் உட்பட பயங்கரவாத அமைப்புக்கள் நாட்டுக்குள் நுழையும் அச்சுறுத்தல் நிலவுகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும். எமக்கு கைபொம்மை போன்ற ஜனாதிபதி தேவையில்லை. முதுகெலும்புள்ள ஜனாதிபதியே வேண்டும். அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை. என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.




