செய்திகள்

யாழ் விடுதி சுற்றி வளைப்பு -அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் -த.துவாரகன்

கடந்த 23ம் திகதி 50 பேருக்கான உணவு முற்பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய மருதனாா் மடத்தில் உள்ள எமது உணவகத்தில் முற்பதிவு செய்யப்பட்ட உணவை எடுப்பதற்காக வந்திருந்த சமயம் நேற்றிரவு இராணுவத்தினா் சுற்றிவளைத்து பெருமளவு இளைஞா்களை கைது செய்திருக்கின்றனா்.சம்பவத்தில் 50 உணவு பெதிகளை வாங்குவதற்காகவே இளைஞா்கள் வந்திருந்தனா். அதற்கு மேலதிகமாக எங்கள் ஹோட்டலில் எந்த வொரு நிகழ்வும் இடம்பெறவில்லை. அந்த நிகழ்வு பிறிதொரு இடத்தில் இடம்பெற்றது. எங்கள் ஹோட்டலில் இரு ந்து ஒரு சிகரட் அல்லது ஒரு மதுபான போத்தலை கூட இராணுவத்தினா் மீட்கவில்லை என இன்று காலை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுன்னாகம் பிரதேச சபை உறுப்பினரும் ஹோட்டல் உாிமையாளருமான த.துவாரகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிகழ்வு நடந்தது வேறு இடத்தில், உணவு எடுக்கவந்தவா்களை இராணுவம் கைது செய்த நிலையில் நாம் ஆவா குழுவுக்கு பிறந்தநாள் கொண்டாட ஹோட்டல் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவ்வாறான நிகழ்வு நடக்கவில்லை. மேலும் கைது செய்யப்பட்டவா்கள் குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்கள் அல்ல. எனவே இந்த சம்பவம் அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகவே நாங்கள் கருத வேண்டியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

நாம் ஆவா குழு உறுப்பினா்களின் நிகழ்வுக்கு இடம்கொடுக்கவில்லை. இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா குழு உறுப்பினா்களோ அல்லது குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்களோ அல்ல என்பதை சுன்னாகம் பொலிஸாா் உறுதிப்படுத்தியிருப்பதுடன், கைது செய்யப்பட்டவா்களை விடுதலையும் செய்துள்ளனா்.

பின்னா் நான் இராணுவத்தினருடன் பேசியபோது தாம் அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்தமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டாா்கள். பெருமளவு இளைஞா்கள் ஒன்று கூடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் ஹோட்டலை முற்றுகையிட்டதாக கூறினா். பின்னா் அவா்களே பொலிஸாரை அழைக்குமாறும் கூறினா்.ஆனால் அதற்கு முன்னதாகவே நாம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தோம். பின்னா் இராணுவத்தினாின் வாகனங்களிலும், தனியாா் வாகனங்களிலும் இளைஞா்களை ஏற்றி சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு நாங்கள் கொண்டு சென்றிருந்தோம். கைது செய்யப்பட்ட இளைஞா்கள் குற்ற செயல்களுடன் தொடா்படையவா்களா? என சோதிக்கப்பட்டு ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனா் என தெரிவித்துள்ளார்.(15)