விரைவில் அம்மாவாகிறார் சினேகா! புத்தாண்டில் அறிவித்தார் பிரசன்னா
சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்னா – சினேகா ஆகிய இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இத்தகவலை இன்று பிரசன்னா அறிவித்தார்.
பிரசன்னா – சினேகா ஆகிய இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2012 மே 11 அன்று திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில், சினேகா கர்ப்பமாக இருப்பதை தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று பிரசன்னா அறிவித்தார். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:
இந்தச் சிறந்த நாளில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைப் பகிர விரும்புகிறேன். எங்கள் குடும்பத்தில் விரைவில் ஒரு புதிய உறுப்பினரை எதிர்பார்க்கிறோம்.
இதைத் தொடர்ந்து சினேகா, பிரசன்னா ஆகிய இருவருக்கும் ரசிகர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.




