செய்திகள்

யாழ்ப்பாணம்- கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

இன்றுமுதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.புகையிரதத்தில் பயணம் செய்ய விரும்புவோர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தமது ஆசனமுன் பதிவுகள் மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.எனினும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.புகையிரநிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதேவேளை கடந்த மார்ச் மாதம்முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுதிக்கான புகையிரத சேவைகள் அனைத்தும் இன்று 8ஆம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.இன்று காலை 5.45 மணிக்கு கொழும்பிற்கான முதலாவது சேவையும் இரண்டாவது சேவை 9. 45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.(15)