செய்திகள்

கொழும்பு – யாழ் பஸ் விபத்து : 18 பேர் காயம்

ஏ-9 வீதியில் இன்று அதிகாலை பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து, ஓமந்தை பகுதியில் இருந்த பாலத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது காயமடைந்த 18 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -(3)