வளர்த்த கடா கும்பியில் குத்தியதடா
எம்பி எம்பி குதிக்குதடா தென்னிலங்கை
வம்பளந்த வாய்ச்சவடால் கதையொன்றால்
கம்பு சுத்தி கடும்சிலம்பம் ஆடுகின்றார் -அந்த
சொம்பு தூக்கி சொன்ன வசனம் சுட்டதனால்
கொம்பு சீவி மறவர் குலமறுக்க வளர்த்த கடா
உம் கும்பியில் குத்தி நின்றால் வலிக்குமடா
நெம்புகோல் என்று நீங்கள் வைத்திருந்தது -கோடாரி
காம்படா கொடும் பகைவா வெட்டிச் சாய்குமாடா
நம்பிநின்ற தலைவனுக்கு அவன் நம்பிக்கை துரோகி
வெம்பியது என்றவர் விட்டெறிந்துசென்ற கள்ளிக்காய்
அம்பென்று நீவீர் தூணியில் வைத்திருந்த ஆப்பன்றோ – ஆகா
தம்பியை மந்திபோல் குந்தியிருந்து இழும் தேர்தல் மட்டும்
-கொற்றவை




