இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை 9.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.பருத்தித்துறை நீதவானின் இல்லத்தில் சற்று முன்னர் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.(15)




